அகில உலகங்களுக்கும் இறைவியாக ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்கு அருள்பாலித்து வரும் புங்குடுதீவு - 4 பிட்டியம்பதி காளிகாபரமேஸ்வரி அம்பாள் திருவடிகளுக்கு அடியவர்களின் சார்பாக இவ் இணையத்தை சமர்ப்பிக்கின்றோம்.

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2011


 புங்குடுதீவு மேற்கு 4ம் வட்டாரம், பிட்டியம்பதி 
காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் 
கர வருச மகோற்சவ விஞ்ஞாபனம் - 2011

   திருச்சிற்றம்பலம்

தனம் தரும் கல்விதருமொருநாளும் தளர்வறியா
மனந்தருந் தெய்வ வடிவுந்தரு நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரு நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாளபிராமி கடைக் கண்களே.

திருச்சிற்றம்பலம்

அம்பிகை அடியார்களே !
அகிலாண்டகோடி நாயகியாக விளங்கும் காளிகா பரமேஸ்வரி அம்பாளாகிய பிட்டியம்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி அடியார்களுக்கு வேண்டிய வரங்களை அருளும் காளிகா பரமேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் மங்கலகரமான கரவருடம் ஆனித் திங்கள் 13ம் நாள் (28.06.2011) செவ்வாய்க்கிழமை துவாதசித் திதியும், சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, மாலை விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளதால் அத்தருணம் அடியார்கள் வருகை தந்து அம்பாளைத் தரிசித்து இஸ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


கிரியாகால நிகழ்வுகள்
ஆனி மாதம்   12ம் நாள்   27.06.2011     திங்கட்கிழமை :   மாலை அனுக்சை,கிராமசாந்தி,வாஸ்துசாந்தி

ஆனி மாதம்   13ம் நாள்   28.06.2011     செவ்வாய் :             பகல் 12.00 மணிக்கு துவாஜாரோகணம்
                                                                                                   மாலை யாகாரம்பம் (கொடியேற்றம்)

ஆனி மாதம்   17ம் நாள்   02.07.2011     சனிக்கிழமை :       பக்த முக்தி பாவனோற்சவம்

ஆனி மாதம்  20ம் நாள்   05.07.2011      செவ்வாய் :             மாலை வேட்டைத்திருவிழா


காலை 10.32 - 11.57 வரையான சுபநேரத்தில் புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு


ஆனிமாதம்   21ம் நாள்   06.07.2011       புதன்கிழமை :  பகல் இரதோற்சவ திருவிழா


ஆனிமாதம்   22ம் நாள்   07.07.2011       வியாழன் :        பகல் தீர்த்தத் திருவிழா, இரவு கொடியிறக்கம்
                                                                                               சண்டேஸ்வரி ஆச்சாரிய உற்சவம்


ஆனிமாதம்   23ம் நாள்   08.07.2011      வெள்ளி :            பிராயச்சித்த அபிசேகம், மாலை வைரவர் மடை                   


விழாக்கால நேரம்
காலைப் பூசை :                 8.30 மணிக்கு


கும்ப பூசை :                      9.00 மணிக்கு


கொடித்தம்ப பூசை:           10.30மணிக்கு


வசந்த மண்டபப்பூசை:      11.00மணிக்கு


 மாலைப் பூசை :               5.30  மணிக்கு


கொடித்தம்ப பூசை :          6.00  மணிக்கு


கூட்டுப்பிரார்த்தனை :      6.30  மணிக்கு


மங்கள வாத்தியம் :          7.00  மணிக்கு


வசந்த மண்டபப்பூசை :     7.30  மணிக்கு


                            ஆலயக் குரு.                                                               மகோற்சவக் குரு.                                      சிவசிறீ நா. அருணோதயக் குருக்கள்                   சிவசிறீ ம. பிரபாகரக் குருக்கள்



மங்கள வாத்தியம்
பிரசாந்குழுவினர்
(கோண்டாவில்)


மாலை அலங்காரம் 
இ.பரமேஸ்வரன்
(பண்டத்தரிப்பு)

ஒலி ஒளி அமைப்பு
அம்பாள் தேவஸ்தானம்


இவ் விழாக்களில் அடியார்கள் வந்து தரிசிப்பதோடு, தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், பூக்கள் முதலியன தந்துதவி அம்பிகையின் அருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவ காலங்களில் சிவலபிட்டி சனசமூக நிலையத்தினரால் அன்னதானம் வழங்கப்படும்.

 தொ.இல : 021 320 5578
இணையத்தள முகவரி : www.punkuduthivu4kalikaambal.com


விழா உபயகாரர்களும்,
தேவஸ்தான பரிபாலன சபையினரும்

சுபம்














 
Powered by Kaalikaampaal